முடிவுகளை எடுக்கப் பயப்பிடும் அரச அதிகாரிகள்-மோசமடையும் நாட்டின் நிலைமை!

அரச அதிகாரிகள் முடிவுகளை எடுக்க பின்னடிப்பதால் ,நாட்டின் நிலமை இன்னமும் மோசமடைந்து செல்கிறது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையில் அரச அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும்.ஆனாலும் அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகின்றனர்.வடக்கு மாகாணத்தில் முன்னர் ஆளுநராக இருந்த பல்லேகார வடக்கு கிழக்கு மாகாணங்களை பற்றி சிறப்பாக கூட்டங்களில் கூறுவார்.அனர்த்த நிலைமைகளை நாம் சரியாக சமாளிக்க தெரிந்தவர்கள் என்று.வடக்கு கிழக்கு மாகாணம் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் கூறுவார்.

ஆனால் இப்போது அந்த நிலையை எம்மால் பார்க்க முடியவில்லை.கடந்த கொவிட் காலத்திலும் சரி,தற்போதையை பொருளாதார சிக்கலிலும் சரி சரியான முடிவுகளை எடுக்க தவறி விட்டோம்.அதிகாரம் உள்ள அதிகாரிகள் கூட பயந்து பயந்து முடிவுகளை எடுக்கின்றனர்.அல்லது முடிவுகளை எடுக்காமல் விடுகின்றனர்.இதனால் பொருட்களை பதுக்குதல்,அதிக விலைக்கு விற்றல் போன்ற செயற்பாடுகளில் வியாபாரிகள் தற்துணிவாக செயற்படுகின்றனர் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *