
நாளை திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும்.
ஆசிரியர்கள் அருகிலுள்ள பாடசாலைக்கு செல்ல அனுமதியில்லை; தனக்குரிய பாடசாலைக்கே செல்ல வேண்டும்.
பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக உரிய பாடசாலை செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டில் இருந்து Online மூலம் கற்பிக்க வேண்டும்.
மாணவர்கள் விரும்பினால் அருகிலுள்ள பாடசாலைக்கு செல்லலாம்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடாத்திய Zoom கூட்டத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்

