சாவகச்சேரியில் விபத்து; முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்,  சாவகச்சேரி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 64 வயதுடைய நடராசா பொன்னுச்சாமி என்பவரே உயிரிழந்தார்.

சாவச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி மிதிவண்டியில் பயணித்த முதியவர் ஒருவரை, எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

மேலும், வீதியோரத்தில் தரித்திருந்த வாகனம் ஒன்றை முதியவர் கடந்து செல்ல முற்பட்டபோதே எதிரே வந்த வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply