முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான நான்கு நாட்களைக் கொண்ட யோகா பயிற்சிப்பட்டறை பண்டாரவன்னியர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பயிற்சிப்பட்டறையானது ஈசா யோகாமையத்தில் பயிற்சி பெற்ற யோகா பயிற்றுவிப்பாளர் பு.பிரணவன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றது.
காலை 6.30மணி தொடக்கம் காலை 8.30மணிவரை இடம்பெற்றுவரும் இப் பயிற்சிப் பட்டறையில் சூரிய நமஸ்காரம் எனும் தலைப்பிலான யோகா பயிற்சி முழுமையாக கற்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

