துவிச்சக்கரவண்டி விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எரிபொருள் நெருக்கடி நிலையையடுத்து துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், துவிச்சக்கர வண்டி விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் மரணித்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் ஆயிரத்து 202 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.

தற்போதை எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே துவிச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வீதி பாதுகாப்பு தொடர்பில் பிரதிக் பொலிஸ் மா அதிபரால், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *