நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஒன்று திரண்ட ஆசிரியர்கள் தமக்கு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.







