கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சிலர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *