இருவேறு இடங்களில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி

கடுவெல – மாலபே வீதியில் கடுவெலயிலிருந்து மாலபே நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று மோதியதில் பாதசாரி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் கடுவெல நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 59 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாலபே பொலிஸார. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கல்பிட்டி நோக்கி பயணித்த இரண்டு உந்துருளிகள்இ நுரைச்சோலை – கல்பிட்டிய வீதிஇ நாவற்காடு சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து,,வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் உந்துருளிகளை செலுத்திய இருவரும், உந்துருளியில் பின்னால் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *