நிதி நிவாரணத்தை பெற்றுக்கொள்வது குறித்து IMF பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவதானம்

இலங்கை எதிர்பார்த்துள்ள நிதி நிவாரணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே, நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை எதிர்பார்த்துள்ள நிதி நிவாரணத்தை பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *