போலிக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே எம்மவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்! காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக போலி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே எம்மவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 73 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனது 73 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இந்நாளை கறுப்பு நாளாக அறிவிக்கின்றோம் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் 4 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *