கீரிமலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கழுத்து நெரித்துக் கொலை! வெளியானது பின்னணி

காங்கேசன்துறை – கீரிமலையில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை உடற்கூற்றுப் பரிசோதனையின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதியவரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 42 மற்றும் 62 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் ச. நடராசா (வயது- 63) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார்.

நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாக அவரை தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிடப்பட்டது.

முதியவரின் கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலினால் உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *