ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்- அங்கஜன் நடவடிக்கை!

இன்றையதினம் இடம்பெற்ற யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் ,விவசாயிகளுக்கு ,மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் ,பெற்றோல் ,எரிவாயு விநியோகம் பற்றிய விடயங்கள் பேசப்பட்டது. அதேவேளைபொது மக்கள் மிகவும் அசௌகரியத்தை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை பெற்றோல் செட்டுகளில் பார்க்கும் பொழுது 3நாட்கள் தொடர்ந்தும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இதனால் எரிபொருள் நிலையங்களில் பலத்த பிரச்சனைகளும் எற்ப்படுகின்றது . இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பலரது வேண்டுகோள் .

இன்று பல தீர்மானங் களும் எடுக்கப்பட்டன ,

ஒரு புதிய பொறிமுறையின் கீழ் அனைத்து எரிபொருள் விநியோகமும் வர வேண்டும் என்பது முக்கியமான விடயம் .

அனைத்து கொடுப்பனவும் ஒரு அட்டையின் கீழே வழங்கப்படும் .
வாகனங்களுக்கு ஏற்றால் போல் அட்டைகள் வளங்கப்படும் . ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னுமோர் இடத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாது .

எரிபொருளின் கணக்கெடுப்பு எப்பொழுதும் பிரதேச செயலாளரிடம் காணப்படும் .

எல்லா விடயங்களும் வெளிப்படையா நடை பெறவே ஏற்பாடு செய்யபடுகின்றது .

அதுமட்டுமல்லாமல் நாங்கள் gas நிறுவன முகாமையாளரிடமும் பேசி இருக்கின்றோம் .

வீட்டு பாவனைகளுக்கு பிரதேச செயலகம் மூலமும் , கடைகளுக்கு பிரதேச செயலகம் மூலம் டீலர்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம் . மேலும் ஒரு கடைக்கு 10 சென்ற இடத்தில் அந்த நிலை மாறி எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது .

முரண்பாடு இல்லாது இயங்க வேண்டும் ஏன்பதற்காக ,ஒரு இடத்தில 5 எரி பொருள் நிரப்பு நிலையம் இருக்குமேயானால் அதில் ஒன்றை ,நாள் ஒன்றையும் குறிப்பிட்டு செயட்பட வேண்டும் .

ஊடகவியலாளர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் .

மேலும் அரிசியில் பாரிய விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது . இன்று வர்த்தக சங்கங்களில் இருந்தும் வந்திருந்தார்கள் .அது பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அரிசியின் விலை வரையறை பற்றியும் பேசப்பட்ட்து .

இன்று 2.30மணியளவில் இன்னுமொரு கூட்டமும் இருக்கிறது ,அரிசி ஆலை உரிமையாளர்களுடனும் ,வர்த்தக சங்கத்துடனும் ,இன்று முழுமையான தீர்மானம் எடுக்க கூடியதய் இருக்கும் .

எனக்கு எரி பொருள் நிலையம் இருக்கிறது என்ற கட்டுக்கதைகள் பொய் ,எனக்கு ஒரு இடமும் நிரப்பு நிலையம் இல்லை ,அப்பிடி இருந்தால் நான் பதவி விலகுகின்றேன் .இல்லை அது என்னுடையது என்றால் ,உரிமை பத்திரத்தை பெற்று தந்து விட்டு இலவசமாகவே எரிபொருட்க்களை பெற்று கொள்ளுங்கள்.

இவாறான விடயங்கள் வெறுமனே அரசியல் சேறு பூசுவது போன்று செயல்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *