நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை குழு கூட்டத்தில் வேலு யோகராஜா மீதான அரசு காணி மோசடி தொடர்பான குற்றம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆராயப்பட்டு, உண்மைத்தன்மையின் அடிப்படையில் நிர்வாக சபையினால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்

