இலங்கையில் இரண்டு வேளை உணவு உட்கொண்டவர்கள் அதை ஒரு வேளையாக குறைத்துக் கொண்டனர்! – யுனிசெப்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது 1.7 மில்லியன் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இலங்கையில் 10 இல் 7 குடும்பங்கள் தாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான செய்தி தொடர்பாளர் பிஸ்மார்க் ஸ்வாங்கின் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் சிறுவர் நெருக்கடியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடிகளின் சுமையை 1.7 மில்லியன் சிறுவர்கள் சுமக்க வேண்டியுள்ளது.

தெற்காசியாவிலேயே குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாடு காணப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாகவுள்ளது.

பொருளாதார நெருக்கடியானது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் அதனை இரு வேளையாகவும் , இரு வேளை உட்கொண்டவர்கள் அதனை ஒரு வேளையாகவும் குறைத்துக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *