
கொழும்பு,ஜுன் 20
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வரும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பனீஸ் இன்று கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தனி அல்பனீஸ் தலைமையிலான அரசாங்கமானது அகதிகளுக்கு சார்பானதாக உள்ளது எனவும், அவர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என ஆட்கடத்தல்காரர்கள் உறுதியளித்தனர் என அவுஸ்திரேலியாவினால் நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மெல்பேர்னில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பனீஸிடம், மேற்படி பெண்ணின் தகவல் குறித்து செய்தியாளர்கள் வினவினர்.
அப்போது, அவர் பதிலளிக்கையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை தெளிவானது. படகு மூலம் வருபவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
தனது அரசாங்கம் பலவீனமான மனிதாபிமானத் அல்லாமல் எல்லைககளில் பலமானதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

