வவுனியாவில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா மடுகந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குள பகுதியில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் வேட்டைக்கு சென்றவர்கள் பயன்படுத்திய வெங்காய வெடி வெடித்ததனாலேயே யானை இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட வடக்கு மாகாணத்தின் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து வயது மதிக்கத்தக்க யானையின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *