இலங்கை, சீனாவுக்கிடையிலான விமான சேவைகள் அதிகரிக்க தீர்மானம்

கொழும்பு,ஜுன் 20

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் முன்னெடுக்கப்படும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சீனா, இவ்வாரம் முதல் இலங்கைக்கு 3 விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் கியூ சென்ஹொங் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள், எதிர்காலத்தில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான நிவாணரங்கள் தொடர்பில் தூதுவர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *