
அரசியல் தலைவர்களின் தேவைகளை செய்து கொடுக்கும் பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிரப் ரஹ்மான் தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர். எரிபொருள், மண்ணெண்ணெயிற்கு 3,4 நாட்கள் வரிசையில் நிற்கின்றனர்.
கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க இப் பிரச்சனை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 16ம் திகதி குருணாகல் பிரதேசத்தில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர், அங்கு நிற்கும் பொலிஸ் அதிகாரிகள் மக்களின் பாதுகாப்பிற்கு இல்லை, உயர் அதிகாரிகளிற்கு மாத்திரமே பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மக்கள் அங்கு பாரிய பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றனர், இந் நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் என்ற முறையில் அவர்களை பாதுகாக்க வேண்டும்.
எனவே, அரசியல் தலைவர்களின் தேவைகளை செய்து கொடுக்கும் பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மே – 9ம் திகதி மேற்கொண்டது போல, இன்றும் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இவை சாதாரண மக்களிற்கு செய்யும் அசாதாரண செயல்
ரணில் விக்கிரமசிங்க, கோட்டா கோ கம மீது தாக்குதல் நடத்தியதுபோது, ராஜபக்ஷ குடும்பத்தினருடன் எந்த உறவும் ஏற்படுத்த மாட்டேன் என்றார். ஆனால் இரண்டே நாட்களில் ராஜபக்ஷ குடும்பத்தினற்கு ஜால்ரா போட தொடங்கி விட்டார்.- என்றார்.

