இன்று மேலும் 1,380 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,380 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 301,272ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

இதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்றைய தினம் 3 இலட்சத்தை கடந்தது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,499 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 271, 855 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *