அம்பாறை-திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் 35 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் தாணிடியடி கிராமத்தில் நேற்று நடைபெற்றன.
காணிக்காக விண்ணப்பித்திருந்த குடும்பங்களுக்கு, காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம், காணி மற்றும் காணி மேம்பாட்டு அமைச்சின் ஊடாக, திருக்கோவில் பிரதேச செயலகத்தால்ல் இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி, காடுகள் மீள் வளர்ப்பு, வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கினார்.