கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே, பொது போக்குவரத்து பஸ்களின் பயணிக்க முடியுமென்ற வகையிலான நடைமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் பட்சத்தில், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை வழமை போன்று ஆரம்பிக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் பட்சத்தில், கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவு (டோஸ்களை) பெற்றுக்கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.