ரணிலை பதவி நீக்க முயற்சியா?

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக் கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு அறிவித்ததாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், பிரதமர் அலுவலகமும் மறுத்துள்ளன.

இந்த செய்தியை வெளியிட்டுள்ள கொழும்பின் சிங்கள ஊடகம் ஒன்று, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சாகர காரியவசத்தின் பதிலையும் பதிவிட்டுள்ளது.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதியினால், தனிப்பட்ட முறையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதா என்பது தனக்குத்
தெரியாது.

எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கை இருந்தால், முதலில் கட்சிக்கு அறிவிக்கப்படவேண்டும், எனினும் கட்சி என்ற வகையில் அத்தகைய அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என வினவிய போது, அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், வேறு சில பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை
விடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெர முன பிரதமர் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், இது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரும், ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான செய்தி பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *