ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா, ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசர கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை கவலை வெளியிட்டது.

குறிப்பாக வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்தும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடை செய்யும் சபையின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அழைப்பு விடுத்தது

எனவே கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் சபையின் தீர்மானங்களை முழுமையாகச் செயற்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் கருத்து தொடர்பாக வடகொரியா குறித்த பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply