கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மூதுார் நல்லுார் பிரதேசத்தில் உள்ள ஆதிவாசிகள், மற்றும் தோப்பூர் பிரதேச மக்களுக்கு இடையிலாக நிலவுகின்ற காணிப்பிரச்சினை தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று( 20) மாலை மூதுார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மேலதிக மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர், கமநல சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளன பிரதிநிதிகள், ஆதிவாசிகளின் பிரதிநிதிகள் என பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரச்சினைகளை ஆராய்ந்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், காணிக்கு பொறுப்பான மேலதிக மாவட்ட செயலாளர் தலைமையில் பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர், மாவட்ட நில அளவையாளர் மற்றும் மாவட்ட உதவி கமநல ஆணையாளர் உட்பட 11 உறுப்பினர்களை கொண்ட குழுவை நியமித்து குறித்த பிரச்சினைகளை ஆராய்ந்து பரிசீலித்து தீர்வுத் திட்டங்களை எதிர்வரும் வாரத்திற்குள் முன்வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.


பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

