
முல்லை, ஜுன் 21
யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு பாதுகாப்புப் படையினரால் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்ட முயற்சித்தபோது நிலத்தடியில் பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்று காணப்பட்டதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, அதனையடுத்து, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மண்ணெண்ணெய் அதனை தோண்டி எடுக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் ஆர்.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

