நாட்டில் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகம்! விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலையை பயன்படுத்தி இடம்பெற்று வரும் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்று முன்தினமும் 23 கொள்கலன்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்பட்டதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய சூழ்நிலையில், மற்றுமொரு எரிபொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவ்வாறு வழங்கப்படும் எரிபொருட்களின் தரம் தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த சட்டவிரோத வர்த்தகம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

போராட்டங்களில் ஊடுருவிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *