தம்மிக்கவுக்கு எதிரான மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று!

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த மனுக்கள் நேற்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை தான் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொள்ளப்போவதில்லை என வர்த்தகர் தம்மிக பெரேரா அறிவித்துள்ளார்.

தமது தீர்மானத்தை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, இந்த மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

போராட்டங்களில் ஊடுருவிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *