சென்னை, ஜூன் 21: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பனையூர் பகுதியில் கடற்கரையோரமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் எம்பி கஜேந்திரன் பிரமாண்டமான வீடு கட்டி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 கோடிக்கு கட்டப்படும் இந்த வீடு தொடர்பாக , சென்னை காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கியுள்ளதாக தமிழ் வின்.LK யின் இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வெளிநாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் அனுப்பிய பணத்தை கையாடல் செய்தே இந்த வீடு கட்டப்படுவதாக சென்னை காவல்துறை மூத்த அதிகாரியொருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மேலும், இந்தப் பணம் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்பது தொடர்பில், சென்னை காவல்துறை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தமிழ் வின்.LK க்கு தெரிவித்தார்.

தமிழீழம் பிடிப்பதாக அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்திக் கொல்லக் கொடுத்த கஜேந்திரன், தான் போராடி மடியாது, மக்கள் அனுப்பும் பணத்தில், தனக்கு மாளிகை கட்டிவருவது தமிழீழ, புலி ஆதரவாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

