யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜீன் 21 சர்வதேச யோகா தினத்திற்கு இணைவாக யாழ் மாவட்டத்தின் 08வது யோக தின கலைப்பயிற்சிகள் இன்று யாழ் இந்திய மத்திய கலாச்சார முன்றலில் நடைபெற்றது.
குறித்த யோகா தின கலைப்பயிற்சிகளை யாழ் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதில் யோகலைகளில் ஆரம்பகலையும் 12 வகையான இடைநிலைகள் கலைகளும் இதில் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,யாழ் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அயல் பாடசாலை அதிபர்கள் இந்திய தூதரக உயர் அதிகாரிகள்,வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர்கள்,கல்லூரியின் பதவி நிலைய ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள்,உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.






பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

