பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக சோதித்தது சீனா!

பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனையை சீனா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6ஆவது சோதனையாகும்.

இதுதொடர்பாக சீன பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், ‘இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது.

சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் இச்சோதனைகள், நாட்டுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என கூறினார்.

தாய்வான் மீதான சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் வேளையில் சீனா இத்தகைய சோதனையை நடத்தியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *