இன்று தம்மிக்கவுக்கு எதிரான மனு மீதான மேலதிக பரிசீலனை

கொழும்பு, ஜுன் 21

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த மனுக்கள் நேற்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை தான் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொள்ளப்போவதில்லை என தொழிலதிபர் தம்மிக பெரேரா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *