கிழக்கு ஆளுநர்- பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்த திறந்த பூப்பந்தாட்ட போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார். 
திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்புக்கு முன்னதாக பூப்பந்தாட்ட போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் ஆளுநரின் தலைமையில் திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தின்  பூப்பந்தாட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஆளுநர் மற்றும் உயர்ஸ்தானிகர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை இதன் போது வழங்கி வைத்தார்கள்.

 இதில் பிரதி உயர்ஸ்தானிகரின் மனைவி உட்பட பிரதிநிதிகள் குழுவும் இலங்கை பூப்பந்து சங்கத்தின் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *