ரூ.10 மில்லியன் பெறுமதியான ரின் மீன் பறிமுதல்

குருணாகல், ஜுன் 21

குருணாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரி சபை  பன்னல முகலான பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்து, சுமார் ரூ.10 மில்லியன் ரூபா பெறுமதியான ரின் மீன்களை கைப்பற்றியுள்ளதாக பாவனையாளர் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமக்கு கிடைத்த தகவல் ஒன்றிலேயே குறித்த ரின் மீன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இவை கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நவீன உபகரணங்களின் உதவியுடன் இந்த விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், விலை மற்றும் உற்பத்தி ஆண்டுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட சுமார் 17,000 மீன் ரின்கள் குளியாப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *