நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், “மின்சாரம் வழங்கல், பெற்றோலிய மற்றும் எரிபொருள் விநியோகம், வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும்” இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *