இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பங்குபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அச்சம்

எரிபொருள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

