சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு ஹட்டனில் இன்று ஆர்ப்பாட்டப்பேரணி!

சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு, ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கி நிலமற்றோருக்கான நிலம் எனும் தொனிப்பொருளிலேயே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் ஆரம்பித்த குறித்த பேரணியானது ஹட்டன் சாரதா கலாசார மண்டபம் வரை சென்றது.

இதன்போது மலையக மக்களுக்கு விவசாய காணி வழங்க வேண்டும் என்றும், வீடு கட்ட 20 பேர்ச் காணி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுக்கு தெனியாய, மாத்தளை, பதுளை, நுவரெலியா போன்ற பகுதிகளை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மலையக மக்களின் கௌரவமான வாழ்வுக்கும், வாழ்வாதாரத்திற்குமான காணி உரிமையினை உறுதிசெய்வதன் மூலம் எமது தேசத்தின் அபிவிருத்தியை பலப்படுத்தி நாட்டின் தேசிய நீரோட்டத்தில் பங்கு கொள்வதை உறுதி செய்வோம் என இதன்போது போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *