குடும்பத் தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் பலி! திருமலையில் பதற்றம்

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை-அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு (20) மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

போராட்டங்களில் ஊடுருவிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *