புத்தளத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று நண்பகல் முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த மதீப்பீட்டுப் பணிகளுக்காக வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
புத்தளம் சென். அன்றூஸ் மஹா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (21) முதல் ஆரம்பிக்கபடவிருந்த நிலையில் மேற்படி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையமான புத்தளம் சென். அன்றூஸ் மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த ஆசிரியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இலங்கையில் கொரோனா அதனைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடி என்று மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், க.பொ.த சாதாரன தர மாணவர்களின் எதிர்காலத்தையும் இதன்மூலம் கேள்விக்கு உட்படுத்த வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேற்படி, பரீட்கை வினாத்hன் மதிப்பீட்டு பணிகளுக்காக வருகை தரும் ஆரிசியர்களுக்கு உடனடியாக எரிபொருள் வழங்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேற்படி தமிழ் மொழிமூல பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளு;ககாக சுமார் 350 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பீட்டுப் பணிகளுக்காக புத்தளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும், எரிபொருள் இன்றி, அதிக பணத்தை செலவழித்து முச்சக்கர வண்டி மூலம் கடமைக்கு வருகை தருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை இன்று (21) நண்பகல் முதல் குறித்த மதிப்பீட்டுப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமானால் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதும் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.




பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)
Facebook: https://www.facebook.com/samugamweb
Instagram: https://www.instagram.com/samugammedia/
Twitter: https://twitter.com/samugammedia

