யாழ், ஜுன் 21
யாழ் இந்திய துணைத் தூதரகம் ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 8-வது சர்வதேச யோகா தினம் இன்று யாழ்ப்பாண கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
யோகா பயிற்றுனர்கள் சூரியகுமார், உமாசுதன், திருமதி. குமாரலிங்கம் கோகிலவாணி மற்றும் கோணேஸ்வரம் ஆகியோர் மேடையில் “யோகா ஆசனங்களை” மேற்கொண்டதுடன் அதைத் தொடர்ந்து 150- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் சமூக விலகல் விதிமுறைகளைப் பேணி யோகா ஆசனங்களை செய்தனர்.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.ராகேஷ் நட்ராஜ் கூறியதாவது,
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதில் யோகாவின் முக்கிய இடம் வகிக்கின்றது. துணைத் தூதரக ஊழியர்கள் கார்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து மற்றும் மிதிவண்டிகளை முடிந்தவரை பயன்படுத்துவார்கள்.
மேலும், வடமாகாண சபை அவைத்தலைவர் திரு. சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் திரு. வி.மணிவண்ணன், யாழ் மாநகரசபை ஆணையாளர் திரு. த.ஜெயசீலன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் உதவிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, பாடசாலை முதல்வர்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




