போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு 6 லட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை பகுதிகளில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் குமார் என்பவரது 42வது பிறந்தநாளையொட்டி பெயர் குறிப்பிட விரும்பாத நெருங்கிய உறவினால் குறித்த பொதகள் வழங்கி வைக்கப்பட்டது.
வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது போர் சூழலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வாறு தாயக உறவுகளிற்கு கரம் நீண்டும் புலம்பெயர் உறவுகள் மக்களால் பாராட்டப்பட்டனர்.







பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)
Facebook: https://www.facebook.com/samugamweb
Instagram: https://www.instagram.com/samugammedia/
Twitter: https://twitter.com/samugammedia

