எரிபொருள் நெருக்கடி தொழில்நுட்ப பிரச்சினையே தவிர அரசியல் பிரச்சினை அல்ல!

எரிபொருள் நெருக்கடியானது தொழில்நுட்பப் பிரச்சினையே தவிர அது அரசியல் பிரச்சினை அல்லவென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தமது குடும்பத்தினரும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதால், மக்கள் படும் இன்னல்களை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண தற்போதைய அமைச்சரவை அயராது உழைத்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், எனவே கூட்டு வேலைத்திட்டம் தேவை. எனவும் அமைச்சர்

நாட்டின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களுக்கு மதிப்பளிக்க முடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமாக இருப்பதால், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது, இப்போது 24 மணி நேரமும் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் மக்களின் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் அரசியல் இலாபம் அடைவதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Facebook:https://www.facebook.com/samugamweb

Instagram:https://www.instagram.com/samugammedia/

Twitter:https://twitter.com/samugammedia

Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *