பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கட்டுமானப்பணிக்கான நிதியம்

கல்முனை பிராந்தியத்தில் பழமைவாய்த ஆலயங்களில் ஒன்றான, பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கட்டிடப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆலய திருப்பணியினை பூரணப்படுத்த ஆலய பரிபாலனசபையினர் எமது உறவுகளிடம் நிதி உதவிவியை நாடுகின்றனர்…

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கட்டுமானப்பணிக்கான நிதியம்!

இலங்கையின் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை மாநகரின் வடக்கே பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் பல நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதும் இப்பகுதியில் பழமை வாய்ந்த ஆலயமுமாகும்.

இவ்வாலயத்தின் கட்டிடங்கள் சிதைவடைந்த வலுவிழந்த நிலையினால் ஆலயத்தை புணருத்தாரணம் செய்து கட்டும் பணி ஆரம்பமானது. 2017 ஆம் ஆண்டு ஆலய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டு கட்டம் கட்டமாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

பூரணமாக இக்கட்டிட வேலைகளை நிறைவு செய்து முடிப்பதற்கு மேலும் இரண்டரைக்கோடி ரூபாய் தேவையாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே தங்களால் இயன்ற நிதி பொருள் உதவிகளை வழங்கி ஆலய திருப்பணியில் நீங்களும் இணைந்து இக்கட்டிட வேலைகளை பூரணப்படுத்த அனைவரையும் அன்பாய் வேண்டுக்கின்றோம்.
உங்கள் நிதி உதவிகளை ஆலய வங்கிக்கணக்கில் வைப்பிட்டு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
கணக்கு இலக்கம் 100470226416
வங்கி – தேசிய சேமிப்பு வங்கி
கிளை – கல்முனை

தொடர்புகளுக்கு – 0762104926, 0776515352, 0773244320

இப்படிக்கு
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பரிபாரன சபை
பாண்டிருப்பு கல்முனை – இலங்கை

Leave a Reply