ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார் சரித் அசலங்க

கொழும்பு,ஜுன் 21

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க இன்று தனது கன்னி ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்தார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

அசலங்கா தனது சதத்திற்காக 99 பந்துகளை எதிர்கொண்டு அதில் பத்து பந்துகளில் பவுண்டரிகளை விலாசியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

இலங்கை 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது சரித் அசலங்க களம் நுழைந்தார்.

சரித் அலங்க மற்றும்  தனஞ்சய டி சில்வா சிறந்த இணைப்பாட்டம் மூலம் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர்.

அசலங்க இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 அரை சதங்களை பெற்றுள்ளார்.

இந்த சதத்தை பெறுவதற்கு முன்னர், அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 77 ஆக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *