ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியூசிலாந்தின் மத்திய வங்கி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

அதன்படி ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அதன் பண விகிதத்தை கால் சதவிகிதம் அதிகரித்து 0.5% ஆக உயர்த்தியது.

பொருளாதார நிபுணர்கள் கடந்த மாதம் இந்த உயர்வை எதிர்பார்த்திருந்தபோதும் கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு காரணமா வங்கி நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

பொருளாதாரம் தொடர்ந்து மீட்டெடுக்கப்படுவதால் சில நடவடிக்கைகளை அகற்ற திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மந்தநிலையிலிருந்து விரைவாக மீண்ட நியூசிலாந்து ஓரளவுக்கு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி மற்ற நாடுகளுக்கு முன்பாக அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொடங்கியது.

Leave a Reply