சோஷலிச கட்சி அலுவலகத்தினுள் நுழைந்து பொலிஸ் அதிரடி சோதனை

நுகேகொடை,ஜுன் 21

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் அலுவலகத்தை பொலிஸ் இன்று (21) சோதனையிட்டுள்ளனர்.

மிரிஹான மற்றும் வெள்ளவத்தை காவல் நிலையங்களின் அதிகாரிகள் குழுவொன்று இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்றும், எந்தவித முன்னறிவிப்பு அல்லது அனுமதியின்றி கட்சி அலுவலகத்திற்குள் நுழைவது சட்டவிரோதமானது என்றும் முன்னிலை சோஷலிக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவரை கைது செய்வதற்காக தாம் வந்ததாக பொலிஸார் காரணம் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யார் என்பது தொடர்பில் காவல்துறையினர் தமக்கு அறிவிக்கவில்லை என புபுது ஜயகொட குறிப்பிடுகின்றார்.

கட்சி அலுவலகங்களுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என புபுது ஜயகொட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *