டீசலை பெற அனுமதி; கைவிடப்பட்டது தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம்!

யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக எரிபொருளை பெறுவதற்காக தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுவோர் நாள் கணக்கில் காத்து நின்றும் எரிபொருள் கிடைக்காததால், இ.போ.ச. டிப்போவுக்கு முன்பாக இன்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் தனியார் பேருந்து உரிமையார்களை தாக்கி, தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் நாளை போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

எனினும், இ.போ.ச நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசலை இனி பெற்றுக்கொள்ளலாம் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவித்த வேளை, நாளை நடத்தவிருந்த போராட்டத்தை கைவிட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானத்துள்ளனர்.

இதேவேளை, நாளை வழமை போன்று தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக எரிபொருளை பெறுவதற்காக தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுவோர் நாள் கணக்கில் காத்து நின்றுள்ளனர். எனினும் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் டிப்போவுக்கு முன்பாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தி நிலமையை சமாளித்தனர்.

அதன்பின்னர் தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுவோர் டிப்போ வாசலில் குழுமி நின்ற வேளை பொலிஸார் தனியார் பேருந்து உரிமையார்களை தாக்கி, தடிகள் கொண்டு துரத்தியமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *