யாழில் மாயமாக மறைந்த முச்சக்கரவண்டிகள்!(படங்கள் இணைப்பு)

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச மற்றும் தனியார் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் யாழிலும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்கின்றது. அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடை அடுத்து துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் யாழின் பிரதான வீதிகளில் உள்ள ஆட்டோ தரிப்பிடங்களில் ஆட்டோக்கள் இல்லாது வெறுமையாக காட்சியளிக்கின்றது.

பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலையிலேயே ஆட்டோ தரிப்பிடங்களில் ஆட்டோக்கள் இல்லாது வெறுமையாக காட்சியளிப்பதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *