
வெள்ளிக்கிழமை எரிபொருள் தரப்படும் என அறிவிக்கப்படின், புதன்கிழமையே மக்கள் வரிசையில் நிற்கின்றனர். அவ்வளவு நாள் வரிசையில் மக்கள் நிற்கும் போது, ஒரு சிலரிற்கு எரிபொருள் வழங்குவதால் பாரிய சிக்கல் காணப்படுகிறது என வைத்தியர் டிலான் பிரனாந்து தெரிவித்தார்.
இன்று நம் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை அதிகரித்து கொண்டு வருகிறது.
இன்று சுகாதார சேவை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் அனைவரும் நன்கு அறிந்த விடயம். அதாவது மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் சுகாதார சேவையை நடாத்தி செல்வதற்கு சில தடங்கல்கள் காணப்படுகிறது.
இச் சேவையை வழங்க சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலையிற்கு சமூகமளிக்க வேண்டும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பணியாளர்கள் வரிசையில் 2,3 நாட்களாக நிற்கின்றனர்.
அதேபோல பேருந்து கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மக்கள் மட்டுமல்ல, சுகாதார பணியாளர்களும் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
எரிபொருள் அமைச்சர், வெள்ளிக்கிழமை நாட்களில் சுகாதார பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்குவதாக அறிவித்தபோதிலும், மக்களிற்கும் எரிபொருள் தேவை காணப்படுகிறது.
வெள்ளிக்கிழமை எரிபொருள் தரப்படும் என அறிவிக்கப்படின், புதன்கிழமையே மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
அவ்வளவு நாள் வரிசையில் மக்கள் நிற்கும் போது, ஒரு சிலரிற்கு எரிபொருள் வழங்குவதால் பாரிய சிக்கல் காணப்படுகிறது. இது குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எரிபொருள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், எனவே சுகாதார உத்தியோகபூர்வ குடியிருப்பு வழங்கப்பட வேண்டும்.
அல்லது இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுகாதார சேவையிற்கு தனியாக வாகன சேவையை வழங்க வேண்டும்,
அதிவும் முடியாவிட்டால் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குங்கள்.
வரிசையில் நிற்கும் மக்களை முந்திகொண்டு வாங்காமல், அதற்கு ஏற்ற முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை உருவாக்குங்கள்.
இங்கு மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகள் மூடும் அளவுக்கு காணப்படுகினடறன.
எனவே அரசாங்கம் இதற்கு சரியான முறையில் தீர்வை வழங்க வேண்டும். என்றார்.
பிற செய்திகள்

