இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியது.
இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தொடரை கைப்பற்றிய இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்துக்களை தெரிவித்து ருவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
நம் நாட்டில் மிகவும் சவாலான காலகட்டங்களில் ஒன்றின் மத்தியில், கிரிக்கெட் ஒரு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

