சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியால் தற்கொலை செய்த இளைஞன்-பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

யாழ்ப்பாணம், நாவாந்துறையில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞனிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான மோதலின் உச்சகட்டத்தில், ஒரு தரப்பினரால் பிடிக்கப்பட்ட 4 இளைஞர்கள் கடுமையா தாக்கப்பட்டு, முகத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

மேலும் அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டது எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டு வந்தது.

இதனால் அதில் 20 வயதான இளைஞன் ஒருவர் சில தினங்களின் முன்னர் உயிரை மாய்த்துள்ளார்.

மேலும் அந்த காணொளி வெளியான அவமானத்தால் அவர் தற்கொலை செய்ததாக உறவினர்களால் குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *